ANTARABANGSA

ரிம 5.5 பிலிப்பைன்ஸ் செலவில் கூகல் தலைமையகம் கட்டப்படும்

3 ஜூன் 2017, 1:53 AM
ரிம 5.5 பிலிப்பைன்ஸ் செலவில் கூகல் தலைமையகம் கட்டப்படும்

குலோபல், ஜூன் 3:

கூகல் ரிம 5.5 பில்லியன் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை நிர்மாணிக்கும் திட்ட வரைவை பரிந்துரை செய்துள்ளது. பிரிட்டனில் அமையும் இந்த தலைமையகம் படுக்கை அறைகள், விளையாட்டு வளாகம், பூங்கா மற்றும் 200 மீட்டர் ஓட்டத் தடம் போன்ற வசதிகள் 7,000 பணியாளர்களுக்கு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தலைமைச் செயலகம் 870,000 சதுர அடியில் லண்டன் நகரில், கிங் குரோஸ் நிலையத்தின் பக்கத்தில் கட்டப்பட உள்ளது. நிர்மாணிப்பு பணிகள் 2018-இல் ஆரம்பிக்கப் படவுள்ளதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. ராட்சத விளையாட்டு மைதானம் மட்டுமில்லாமல் ஒலிம்பிக் நிலையிலான நீச்சல்குளம், ஓய்வு மற்றும் விளையாட்டு மையங்கள், உடற்பயிற்சி மையம், உள்அரங்க கால்பந்து  மற்றும் கூடைப்பந்து மைதானங்கள் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

கூகல் தனது கட்டிட திட்ட வரைவை கேம்டன் நகராண்மை கழகத்திடம் ஒப்புதலுக்கு சமர்ப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. கிங் குரோஸ் எஸ்டேட் பக்கத்தில் தனது 7,000 பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.