ANTARABANGSA

ரிம 14 பில்லியன்-மென்செஸ்தர் யுனைடெட் ஐரோப்பாவின் அதிக விலை மதிப்புமிக்க கிளப் ஆகும்

31 மே 2017, 1:51 AM
ரிம 14 பில்லியன்-மென்செஸ்தர் யுனைடெட் ஐரோப்பாவின் அதிக விலை மதிப்புமிக்க கிளப் ஆகும்
ரிம 14 பில்லியன்-மென்செஸ்தர் யுனைடெட் ஐரோப்பாவின் அதிக விலை மதிப்புமிக்க கிளப் ஆகும்

குலோபல், மே 31:

மென்செஸ்தர் யுனைடெட் ஐரோப்பாவின் அதிக விலை மதிப்புமிக்க கிளப் ஆகவும் வாணிப ரீதியில் 3.08 பில்லியன் ஈரோ அல்லது ரிம 14 பில்லியன் முதல் முறையாக தொட்ட கிளப் என்ற அந்தஸ்தை அடைகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 2.97 பில்லியன் ஈரோ மதிப்பில் ரியல் மேட்ரிட் கிளப் மற்றும் மூன்றாவது நிலையில் பார்சிலோனா 2.76 பில்லியன் ஈரோ மதிப்பில் உள்ளன.

மேற்கண்ட வாணிப மதிப்பீடுகள் சமீபத்தில் தொழில் முறையிலான சேவை வழங்கும் நிறுவனமான கேபிஎம்ஜி வெளியிட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கையில் 39 கிளப்கள் மீது ரசிகர்களின் ஆதரவை சமூக வலைதளத்தின் மூலமாகவும் மற்றும் 2014-15 & 2015-16 வருமானங்களையும்,  ஐரோப்பா முழுவதும் நடந்த போட்டியில் வெற்றிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Arsenal

 

 

 

 

 

 

பேயன் முனிச் தொடர்ந்து நான்காவது இடத்திலும் மென்செஸ்தர் சிட்டி ஆர்செனலை முந்தி ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த இரண்டு குழுக்களும் வாணிப மதிப்பு 1.7 பில்லியன் ஈரோ மதிப்பில் இருப்பதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து நான்கு இடங்களில் செல்சி, லிவர்பூல், ஜுவென்டஸ் மற்றும் ஸ்பர்ஸ் வாணிப மதிப்பு பட்டியலில் உள்ளன.

கேபிஎம்ஜியின் விளையாட்டு இயக்குனர் ஆன்டிரியா சார்தோரி வெளியிட்ட அறிக்கையில், வாணிப மதிப்பீடுகள் ஏற்றம் காணும் போது கால்பந்து விளையாட்டு ஒரு தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து வருவதை காணலாம் என்று கூறினார்.

முதல் 10 இடங்களில் தரவரிசை:

 

1. மென்செஸ்தர் யுனைடெட்  -3.09 பில்லியன் ஈரோ

2. ரியல் மேட்ரிட்  - 2.97 பில்லியன் ஈரோ

3. பார்சிலோனா  - 2.76 பில்லியன் ஈரோ

4. பேயன் முனிச்  - 2.44 பில்லியன் ஈரோ

5. மென்செஸ்தர் சிட்டி - 1.97 பில்லியன் ஈரோ

6. ஆர்செனல்  - 1.95 பில்லியன் ஈரோ

7. செல்சி  - 1.59 பில்லியன் ஈரோ

8. லிவர்பூல்  - 1.33 பில்லியன் ஈரோ

9. ஜுவென்டஸ்  - 1.21 பில்லியன் ஈரோ

10. ஸ்பர்ஸ்  - 1.01 பில்லியன் ஈரோ

செய்திகள்  : கேபிஎம்ஜி

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.