PBT

எம்பிஎஸ்ஜே சிறு அருங்காட்சியகம் தனி சிறப்பு வாய்ந்தது

30 மே 2017, 7:10 AM
எம்பிஎஸ்ஜே சிறு அருங்காட்சியகம் தனி சிறப்பு வாய்ந்தது

ஷா ஆலம், மே 30:

சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஜே) ரிம 300,000 ஒதுக்கீடு செய்து 2018 தொடக்கத்தில் சிறு அருங்காட்சியகத்தை கொம்லெக்ஸ் 3சி- யில் நிர்மாணிக்க உள்ளது என நகராண்மை கழகத்தின் தற்காலிக தலைவர் முகமட் ஸுல்கார்னயன் சீ அலி கூறினார். தற்போது எம்பிஎஸ்ஜே பரிந்துரை மற்றும் திட்ட வரைவை ஆராய்ந்து வருகிறது என்றார்.

"   நமக்கு பொது மக்களுக்கு நெருக்கமான சிறு அருங்காட்சியகம் புத்தகங்கள் மட்டுமில்லாமல் டிஜிட்டல் முறையில் விவரங்கள் கொண்டு செயல்படும். இந்த பரிந்துரையில் அருங்காட்சியகம் நவீன வடிவமைப்பில் மக்களை கவரக்கூடிய வகையிலும் மற்றும் மற்ற ஊராட்சி மன்றங்களை விட தனித்து விளங்கும் அளவில் இருக்க வேண்டும்," என்று கூறினார்

இதனிடையே இந்த அருங்காட்சியகம் எம்பிஎஸ்ஜே வின் நிர்வாக சரித்திரம் வாசிப்பு வடிவில் மற்றும் நகரின் முழுமையான விவரங்கள் இடம் பெறும் என்று தெரிவித்தார். அருங்காட்சியகம், கொம்லெக்ஸ் 3சி மிருகக்காட்சி சாலையின் நிலத்தில் கட்டப்பட உள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையின் செயல்பாடுகளின் செலவீனங்கள் அதிகரித்து வருவதால் மூடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"   மிருகங்களை பராமரிக்கும் நடவடிக்கைகளின் செலவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் உள்ள மிருகங்கள் விற்பனைக்கு உள்ளது. இதனிடையே, பொது மக்கள் மிருகங்கள் மற்றும் தாவர வகைகளை பார்க்கும் பட்சத்தில் அருகாமையில் இருக்கும் சன்வே லகூன் மிருகக்காட்சி சாலைக்கு செல்லலாம்," என்று கூறினார்.

=EZY=

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.