ANTARABANGSA

ஆர்செனல் 13-வது முறையாக எப்ஃஏ கிண்ணத்தை 2-1-இல் செல்சியை தோற்கடித்து வெற்றி பெற்றது

28 மே 2017, 1:25 AM
ஆர்செனல் 13-வது முறையாக எப்ஃஏ கிண்ணத்தை 2-1-இல் செல்சியை தோற்கடித்து வெற்றி பெற்றது
ஆர்செனல் 13-வது முறையாக எப்ஃஏ கிண்ணத்தை 2-1-இல் செல்சியை தோற்கடித்து வெற்றி பெற்றது

லண்டன், மே 28:

ஆர்செனல் கால்பந்து குழு சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தி செல்சி குழுவை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தி 13வது தடவையாக இங்கிலாந்து எப்ஃஏ கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. "தெ கன்னர்ஸ்" என்று அழைக்கப்படும் ஆர்செனல் கால்பந்து குழுவின் வெற்றி நிர்வாகி ஆர்சன் வெங்கருக்கு பரிசாகவும் இது அவரின் எப்ஃஏ கிண்ண ஏழாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆர்சன் வெங்கர் இங்கிலாந்து எப்ஃஏ கிண்ணத்தை வென்று சாதனை படைத்தவர்களில் ஆஸ்தன் விலாவின் ஜோர்ஜ் ராம்சேவின் வெற்றியையும் மிஞ்சிய கால்பந்து நிர்வாகியாக சரித்திரம் படைத்தார். இரண்டு முக்கிய கோல்களை அலெக்ஸிஸ் சான்சேஸ் மற்றும் ஆரோன் ராம்சே மூலம் சிறந்த கால்பந்து நுணக்கத்தின் வாயிலாக புகுத்தினர்.

ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலே சான்சேஸ் மூலம் ஆர்செனல் சர்ச்சைக்குறிய கோலை அடித்தது. ஆனாலும் பிற்பாதி ஆட்டத்தில் 10 ஆட்டக்காரர்கள் உடன் விளையாடிய செல்சி ஆட்டத்தை சமநிலை செய்தது. இரண்டாவது மஞ்சள் அட்டையை 68-வது நிமிடத்தில் பெற்ற விக்டர் மோசஸ் திடலை விட்டு வெளியேற்றப் பட்டார். எட்டு நிமிடங்களுக்கு பிறகு டியாகோ கோஸ்தா மூலம் ஒரு கோலை புகுத்தி இங்கிலாந்து லீக் கிண்ண வெற்றியாளரான செல்சி ஆட்டத்தை சமநிலை செய்தது. இதனைத் தொடர்ந்து நெருக்குதலுக்கு ஆளான ஆர்செனல் ஆட்டத்தை திறன் படுத்தி தனது வெற்றி கோலை ஓலிவர் கிரௌட் தட்டிக் கொடுக்க ராம்சே கோலாக்கினார்.

Arsenal manager Arsene Wenger lifts the FA Cup

 

 

 

 

 

ஆர்சன் வெங்கர் இங்கிலாந்து எப்ஃஏ கிண்ணத்தில் லீக் வெற்றியாளர் செல்சியை தோற்கடித்து வெற்றி பெற்றது தனது கால்பந்து விளையாட்டு நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று பெருமிதம் கொண்டார்.  மேலும், ராம்சே கூறுகையில் ஆர்சன் வெங்கர் தொடர்ந்து ஆர்செனல் குழுவின் நிர்வாகியாக இருக்க தகுதியானவர் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.