MEDIA STATEMENT

முன்னால் இராணுவத்தினர் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள்

23 மே 2017, 2:10 AM
முன்னால் இராணுவத்தினர் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள்

முன்னால் இராணுவத்தினர்  தங்களுக்கான முடிவினை சுயமாக எடுக்கும் ஆற்றலை கொண்டிருப்பது பெருமிதமாக இருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து சிலாங்கூரின் நடப்பு அரசாங்கத்தை ஆதரிப்பது அவர்களின் விவேகத்தை காட்டுவதாகவும் கெஅடிலான் கட்சியின் இளைஞர் பொருப்பாளர் நிக் நஸ்மின் நிக் அமாட் குறிப்பிட்டார்.

முன்னால் இராணுவ வீரர் சங்கத்தின் துணைத்தலைவரின் கூற்றினை வரவேற்ப்பதாக கூறிய அவர் அவர்களின் தொடர் ஆதரவும் சிலாங்கூர் அரசாங்கத்தின் பெரும் பலம் என்றும் தெரிவித்தார்.

இதற்கு  முன்னதாக அவ்வியக்கத்தின் தேசிய துணைத்தலைவர் ஷாஹ்ரூடின் ஓமார் முன்னால் இராணுவத்தினர் சிலாங்கூர் நடப்பு அரசாங்கத்தை முழுமையாக ஆதரிப்பதாக கூறியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

நாட்டின் அமைதி,சுபிட்சம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை இராணுவத்தின் முதன்மை கொள்கையாக இருக்கும் பட்சத்தில் சிலாங்கூரில் மக்களின் நலன்,பாதுகாப்பு,அமைதி மற்றும் சுபிட்சத்தில் பெரும் கவனம் செலுத்தி வரும் வேளையில் அம்மாதிரியான விவேகமான அரசாங்கத்தை ஆதரிப்பதுதான் விவேகம் என முன்னாள் இராணுவத்தினர் கூறியிருப்பது அவர்களின் அறிவார்ந்த சிந்தனையின் வெளிப்பாடு என்றார்.

நடப்பு சிலாங்கூர் அரசாங்கம் குறித்து முன்னால் இராணுவத்தினர் தெளிவான சிந்தனையும் பார்வையும் கொண்டிருப்பது பெருமிதமாக இருப்பதோடு மட்டுமின்றி சிலாங்கூர் அரசாங்கம் சரியான இலக்கை நோக்கி நகர்வதை அஃது உறுதிப்படுத்துவதாகவும் நிக் நஸ்மின் நினைவுறுத்தினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.