NATIONAL

அன்வார் : பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பல்வேறு தரப்பினரின் பணம் மற்றும் பதவியை கண்டு மயங்கி விடாதீர்கள்

21 மே 2017, 6:40 AM
அன்வார் : பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பல்வேறு தரப்பினரின் பணம் மற்றும் பதவியை கண்டு மயங்கி விடாதீர்கள்
அன்வார் : பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பல்வேறு தரப்பினரின் பணம் மற்றும் பதவியை கண்டு மயங்கி விடாதீர்கள்

மக்கள் நீதி கட்சியின் செயல் வீரர்கள் கட்சியின் போராட்ட சிந்தனையை தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும். மாறாக கிளிப்தோகிராட் கூட்டத்தின் சலுகை பேரங்கள் கண்டு மாறிச் சென்று விடக்கூடாது என்று கெஅடிலான் கட்சியின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். தேர்தல் நெருங்கும் காலத்தில் சில பொறுப்பற்ற அங்கத்தினர்கள் பணத்திற்காக கெஅடிலான் கட்சியை மிக மோசமாக விமர்சிக்கும் போக்கு எப்போதும் நடப்பது தான் என்று தெரிவித்தார்.

"   உயர் பொறுப்பில் இருக்கும் ஆட்சியாளர்கள் தங்களின் தவறுகளை மற்றும் மாபெரும் ஊழல் நடவடிக்கைகளையும் மறைக்க இனம் மற்றும் மதங்களை பயன்படுத்தி அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில் நமது கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். நமது கட்சியிலும் சிலர் பணம், பொருள் மற்றும் பதவிக்கும் அடிமையாகி டிவி 3-இல் ஆட்சியாளர்களின் வசனத்தை குரைத்துக் கொண்டிருப்பார்கள்," என்று நினைவுறித்தனார்.

Nurul Izzah

 

 

 

 

 

12-வது கெஅடிலான் கட்சியின் தேசிய மாநாட்டில் அன்வார் இப்ராஹிம் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரின் உரையை நூருல் இஸா அன்வார் வாசித்து, பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரையும் கண்கலங்க வைத்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.