NATIONAL

மலாய் இஸ்லாமிய முகமுடி அணிந்த கிளிப்தோகிராட்டை எதிர்க்க வேண்டும், போற்றப்பட அல்ல!!!

20 மே 2017, 3:22 AM
மலாய் இஸ்லாமிய முகமுடி அணிந்த கிளிப்தோகிராட்டை எதிர்க்க வேண்டும், போற்றப்பட அல்ல!!!

பெட்டாலிங் ஜெயா, மே 20:

பொது மக்கள் குறிப்பாக கெஅடிலான் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவினர் மலாய் மற்றும் இஸ்லாமிய முகமுடி அணிந்த கிளிப்தோகிராட்டை எதிர்த்து போராடி நீதிக்கு முன் கொண்டு வர தீவிரமாக செயல்படும் படி கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நினைவுறித்தனார். கிளிப்தோகிராட் கொள்ளை அடித்த நாட்டின் வளத்தை மக்களுக்கு திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.

"   கிளிப்தோகிராட்டை எதிர்த்து போராட வேண்டும், போற்றப்படக் கூடாது. கிளிப்தோகிராட் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். கிளிப்தோகிராட் தண்டனையிலிருந்து தப்பிக்க விடக் கூடாது. நாட்டின் வளத்தை கொள்ளையிட்ட அனைத்தையும் மக்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். மலாய் மற்றும் இஸ்லாமிய முகமுடி அணிந்த கிளிப்தோகிராட் என்றுமே கிளிப்தோகிராட் தான். மலாய் மற்றும் இஸ்லாமிய முகமுடி போட்ட கிளிப்தோகிராட் தங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்த முடியாது," சிவிக் மண்டபத்தில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் தேசிய மாநாட்டில் உரையாற்றிய போது இப்படி கூறினார்.

=EZY=

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.