RENCANA PILIHAN

மந்திரி பெசார்: சிலாங்கூர் அரசாங்கம் நிலையானது, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முக்கியத்துவம் தரப்படும்

19 மே 2017, 11:10 PM
மந்திரி பெசார்: சிலாங்கூர் அரசாங்கம் நிலையானது, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முக்கியத்துவம் தரப்படும்

பெட்டாலிங் ஜெயா, மே 20:

மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மை, மாநில மக்கள் தொடர்ந்து சிறந்த சேவையை பெற்றிட நிலைநிறுத்தும் படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். அதேவேளையில், தற்போது மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு எந்த வகையிலும் சிக்கல்கள் ஏற்படாது என்று விவரித்தார்.

"   மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்கியதை நினைவில் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆளும் கட்சியின் எல்லா சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது," என்று சிவிக் மண்டபத்தில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் தேசிய மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய போது கூறினார்.

மேலும், தற்போது கெஅடிலான், எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று எதிர் பார்க்கப் படும் பொதுத் தேர்தல் பணிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். கெஅடிலான் கட்சியின் தேர்தல் இயந்திரங்களை மேலும் தீவிரமாக செயல்படும் படி ஆணையிட்டிருப்பதாக தனது அதிகாரப்பூர்வ உரையில் பலத்த கைதட்டல் பறக்கக் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.