SELANGOR

அடிப்படைச் வசதிகளை பத்து ஆராங்கில் மேம்படுத்த வேண்டும்

15 மே 2017, 4:04 AM
அடிப்படைச் வசதிகளை பத்து ஆராங்கில் மேம்படுத்த வேண்டும்

கோம்பாக், மே 15:

மாநில அரசாங்கம், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி மன்றம் ஆகியவை 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பத்து ஆராங் நகரை புறக்கணிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கிராம மேம்பாட்டு மற்றும் பாதுகாப்பு குழுச் செயலாளர், நோர்  அஸ்மி அப்துல்  அஸிஸ் கூறுகையில், முன்னாள் நிலக்கரி சுரங்க நகரமான பத்து ஆராங் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை கவரும் பிரசித்திபெற்ற இடமாக இருக்கும் அனைத்து தகுதிகளும் இருப்பதாக கூறினார்.

ஆனால், இந்த முயற்சி அடிப்படை வசதிகள் குறைவு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை சுற்றுப்புற தளமாக மாற பெரும் தடைக்கல்லாக இருக்கும் என்று தெரிவித்தார்.

"   பொது கழிவறைகள் போன்ற மிகவும்  அடிப்படையான வசதிகள் சுற்றுப் பயணிகள் வலம் வரும் பொது இன்னல்களை சந்திக்க நேரிடும். இதேபோல உணவு கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவை சுற்றுப் பயணிகளை கவரும் அம்சங்களாக  உள்ளது," என்று விவரித்தார்.

நோர் அஸ்மி மேலும் கூறுகையில், பத்து ஆராங் தற்போது ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிளோட்டம் போன்ற விளையாட்டுகளை அனைத்துலக ரீதியில் பிரபலமாகி வருவதாகவும் தெரிவித்தார். பத்து ஆராங் தற்போது 13,000 மக்களையும், காவல்துறை நிலையம், தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், சுகாதார மையம், பள்ளிகள், கடை வீதிகள், மைதானம், குளங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-இல் பத்து ஆராங் 100 ஆண்டுகளை கடந்த நகரமாக அறிவிக்கப்பட்டு மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப் பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.