MEDIA STATEMENT

பல்கலைக்கழக மாணவர்களை அம்னோவின் 71-வது நினைவுநாளில் பயன்படுத்தியது கோழைத்தனம்

13 மே 2017, 1:09 AM
பல்கலைக்கழக மாணவர்களை அம்னோவின் 71-வது நினைவுநாளில் பயன்படுத்தியது கோழைத்தனம்

அம்னோவின் 71-வது நினைவு நாளில் உள்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களை கட்டாயப்படுத்தி புக்கிட் ஜாலில் அரங்கிற்கு கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்ததாக எல்லா  ஊடகங்களிலும் பரவியது அனைவரும் தெரிந்தஒன்றுதான். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்களின் தங்கும் விடுதியில் இருந்து வெளியேற்றப் படுவார்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதற்கு மேலாக, அம்னோ மாணவர்களை சிவப்பு நிற டி-ஸேட்களை அணியுமாறு வற்புறுத்தியதும் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து, மாணவர்களை நஜிப்பை புகழ்ந்து பாடல்களை பாடுமாறு கட்டாயப் படுத்தி உள்ளனர். ஓட்ஸ்ஏப்பில் பரவி வரும் படங்களுடன் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் கடிதமும் அதனுடன் சேர்ந்து உலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அம்னோவின் இந்தச் அநாகரீகச் செயல் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது.

மறுமலர்ச்சி போராட்டம் நடத்தி வரும் பொது பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்ட சந்தேகத்தில் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் பலரை துண்டித்தது சரித்திரம் ஆகும். மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பல்கலைக் கழகம் வரவில்லை, மாறாக கல்வி கற்கவே வந்திருக்கிறீர்கள் என்று முன்பு அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம்  அறிவுரை கூறிகூறியது இன்னும் நினைவில் இருக்கிறது.

ஆனால், இதே அம்னோ இன்று தனது கோழைத்தனத்தை புக்கிட் ஜாலில் அரங்கை நிரப்புவதற்கான பல்கலைக் கழக மாணவர்களை தனது நினைவு நாளில் பேருந்துகளில் நிரப்பி கொண்டு வந்து காட்டுகிறது. அனைத்து மலேசியர்களும் பல்கலைக் கழக மாணவர்களை பகடைக்காயாக பயன்படுத்தும் செயலை முற்றாக நிராகரிக்க வேண்டும். இதன் அடிப்படையில்  அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் பொது மக்களிடம் தனது அநாகரீக செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவிறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்து தகுதி பெற்ற இளையோர்களும் வாக்காளர்களாக பதிவு செய்து எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில்  ஓட்டளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது. இது பல்கலைக் கழக மாணவர்களை பகடைக்காயாக பயன்படுத்தும் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு நல்ல ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். அனைத்து தகுதி பெற்ற பல்கலைக் கழக மாணவர்களும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வாக்களித்து கோழைத்தன அரசியல் நடத்தும் அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்தவேண்டும்.

 

* அமாட் நிஸாம் ஹாமிட்

பகாங் மாநில கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர்

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.