RENCANA PILIHAN

69% சிலாங்கூர் மக்கள் தொடர்ந்து பாக்காத்தானுக்கு ஆதரவு

11 மே 2017, 9:07 AM
69% சிலாங்கூர் மக்கள் தொடர்ந்து பாக்காத்தானுக்கு ஆதரவு

ஷா ஆலம், மே 11:

சிலாங்கூர் மக்களின் ஆதரவு தொடர்ந்து மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி வழி நடத்தும் பாக்காத்தான் கட்சிகளின் கூட்டணிக்கே என்று தெரிகிறது.

டாருல் ஏசான் மையம் நடத்திய புதிய ஆய்வுகள் படி மக்களின்  ஆதரவு ஆகஸ்ட் 2016-இல் 59% ஆக இருந்தது எனவும், தற்போது 69% உயர்ந்து விட்டது என்று விவரித்தது.

டாருல் ஏசான் மையத்தின் துணைத் தலைவர், பேராசிரியர் முனைவர் ரிஸ்வான் ஓஸ்மான் கூறுகையில், மாநில அரசாங்கத்தின் மீது வீண் வதந்தியை பரப்பினாலும் மக்கள் பாக்காத்தானே தங்களின் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"   இந்த மையத்தின் புள்ளி விவரங்களை பார்க்கும் மக்கள் பாக்காத்தான் கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது தெளிவாக தெரிகிறது," என்று  மக்கள் மனநிலை ஆய்வு 4.0-இன் அறிக்கையை மேற்கோள்காட்டி கூறினார்.

இதற்கு முன்பு வெளியிட்ட ஆய்வின் படி பாக்காத்தான் தொடர்ந்து சிலாங்கூர் மக்களின் தேர்வாக அமையும் என்றும் எதிர் வரும் 14வது பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஊராட்சி மன்றங்களின் உறுதியான நிர்வாகம் மற்றும் பொறுப்புள்ள செயல்பாடுகள் மக்களின்  இந்த மாபெரும்  ஆதரவு புலப்பபடுத்துகிறது. மாநில மந்திரி பெசாரின் நிர்வாகத் திறன் மற்றும் மக்களோடு இணைந்து சகஜமாக பலகும் குணமும் மக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த  ஆய்வு 2018 பேரிடம்  எடுக்கப்பட்டது என்றும் சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத்திலும் நடத்தப்பட்டது என்று கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.