SELANGOR

சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு

11 மே 2017, 7:27 AM
சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு
சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு

பெட்டாலிங் ஜெயா, மே 11:

சிலாங்கூரை விவேக மாநிலமாக மேம்படுத்த முயற்சிகளில் தொடர்ச்சியாக  எதிர் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலீடு, தொழிற்துறை, வாணிபம் மற்றும் போக்குவரத்து ஆகிய நிரந்தரக் குழுவின் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர், டத்தோ தேங் சாங் கிம் கூறுகையில், இந்த உச்ச மாநாடு அதிகமான அனைத்துலக முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.

"   இது மாநில அரசாங்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களோடு வட்டார ஒத்துழைப்பை தொடர நல்ல ஒரு சந்தர்ப்பமாகும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக, சிலாங்கூர் 'ஆசியான் நாடுகளின் நுழைவாயில்' எனும் நிலையை அடைந்து வியாபார மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும்," என்று கூறினார்.

சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு 2017-இன் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நடந்த ஹில்டன் தங்கும் விடுதியில் பேசினார்.

IMG_2533

 

 

 

 

 

 

இந்த மாநாடு 17 செப்டம்பர் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் என்று கூறினார். செத்தியா சிட்டி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.