SELANGOR

ஸ்ரீ மூடா சட்ட மன்றம் 250 பெடுலி சேஹாட் சுகாதார அட்டைகளை விநியோகம் செய்தது

10 மே 2017, 9:47 AM
ஸ்ரீ மூடா சட்ட மன்றம் 250 பெடுலி சேஹாட் சுகாதார அட்டைகளை விநியோகம் செய்தது
ஸ்ரீ மூடா சட்ட மன்றம் 250 பெடுலி சேஹாட் சுகாதார அட்டைகளை விநியோகம் செய்தது

ஷா ஆலம், மே 10:

பெடுலி சேஹாட் சுகாதார திட்டத்தின் வழி ஸ்ரீ மூடா சட்ட மன்றம் 250 விண்ணப்பதாரர்களுக்கு அட்டைகளை வழங்கியுள்ளது. இதில் தனிப்பட்டவர்களும் குடும்பங்களும் அடங்கும். ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர், சுஹாய்மி ஷாபியி கூறுகையில் ஏறக்குறைய தனது சட்ட மன்றத்தில் கீழ் பாதி தகுதி பெற்ற பொது மக்களுக்கு இந்த பெடுலி சேஹாட் சுகாதார அட்டை கிடைத்து விட்டதாக கூறினார். கடந்த  ஏப்ரல் மாதம் முதல் தடவையாக 300 பேருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

"   மூன்றாவது முறையாக கூடிய விரைவில், நோன்பு மாதத்திற்கு முன் மக்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் நல்ல பயன்  அடைவார்கள்," என்று தெரிவித்தார்.

Shuhaimi 1

 

 

 

 

 

கடந்த 2017 சிலாங்கூர் பட்ஜெட்டில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ரிம 125 மில்லியன் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 250,000 குடும்பத்தினர் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குடும்ப  அட்டை வருடத்திற்கு ரிம 500 மற்றும் தனிப்பட்ட அட்டை வருடத்திற்கு ரிம 200 சுகாதார சிகிச்சைக்காக பயன்படுத்தலாம். பெடுலி சேஹாட் சுகாதார அட்டை சிலாங்கூரில் உள்ள 1000 தனியார் கிளினிக்களில் சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.