ANTARABANGSA

ஐரோப்பிய ஒன்றியம் மெக்ரோன் வெற்றியினால் நிம்மதி அடைந்தது

9 மே 2017, 4:35 AM
ஐரோப்பிய ஒன்றியம் மெக்ரோன் வெற்றியினால் நிம்மதி அடைந்தது

பாரிஸ், மே 9:

ஐரோப்பிய ஒன்றியம் (இயு) இமானுவேல் மேக்ரோன் வெற்றியினால் நிம்மதி பெருமூச்சு விட்டது. பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் மிதவாத வேட்பாளரான மேக்ரோன் , மேரீன் லீ பேன்னை தோற்கடித்தார். இதுமட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் மிக இளம்  அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. மேரீன் இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டை ஒன்றியத்தில் இருந்து வெளியாக்க போராடி வந்தது தெரிந்த ஒன்றுதான்.

மேக்ரோன் 66% மொத்த வாக்குகள் பெற்றதாகவும் மேரீன் லீ பேன் 34% வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி மிக முக்கியமானது என்றும் குறிப்பாக 20% வித்தியாசமே இருக்கும் என்ற நிலையில் பெரிய அளவில் பெற்ற வாக்குகள்  அனைவரையும் மகிழ்ச்சி அடையச்செய்தது.

மேக்ரோன் முதல் தேசிய நீரோட்டத்தில்  இல்லாத கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  அதிபர் ஆகும். இவரின் வெற்றி மிக விமரிசையாக, அதிகமாக சுற்றுப் பயணிகள் வலம் வரும் சாம்ப் டி எலிஸ் போன்ற நகரங்களிலும் கொண்டாடப் படுகிறது.

இந்த வெற்றிக்கு பிறகு மேக்ரோன்  அடுத்த மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும்  அதில் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.