NATIONAL

ஏறக்குறைய 4,000 செலுத்தப் படாத வரிகளை வசூல் செய்யும்

8 மே 2017, 5:15 AM
ஏறக்குறைய 4,000 செலுத்தப் படாத வரிகளை வசூல் செய்யும்
ஏறக்குறைய 4,000 செலுத்தப் படாத வரிகளை வசூல் செய்யும்

ஷா ஆலம், மே 8:

உள்நாட்டு வருமான வரி இலாகா 3,838 வரி செலுத்தாத நபர்களை நாடு முழுவதும் அடையாளம் கண்டு ரிம 326 மில்லியனை வசூல் செய்ய முற்பட்டு வருகிறது. அதன் தலைமை செயல் அதிகாரி, டத்தோ சாபின் சமீதா பேசுகையில், சம்பந்தப்பட்ட நபர்களை தேடல் நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுத்து வருவதாகவும், வரியை கட்டும் பொறுப்பு மக்களிடையே பதிக்க விழிப்புணர்வாக  இந்நடவடிக்கை அமையும் என்று கூறினார். மேற்கண்ட கூட்டுநடவடிக்கை 'ஓப்ஸ் கூதிப்' வழி 592 அதிகாரிகளைக் கொண்டு 13 வெளியாகும் மையங்களில் இருந்து நடத்தப்படும் என்று விவரித்தார்.

CYBERJAYA 09 DECEMBER 2016. Temuramah bersama Ketua Pegawai Eksekutif LHDN yang baharu, Datuk Sabin Samitah di Ibupejabat Lembaga Hasil Dalam Negeri (LHDN), Cyberjaya. NSTP/FARIZ ISWADI ISMAIL.

"   மேற்கண்ட நபர்களை இன்றிலிருந்து நாளை வரை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கி விட்டோம்," என்று கோத்தா கினபாலு நடந்த நிகழ்ச்சியில் கூறினார்.

உள்நாட்டு வருமானவரி  இலாகாவின் துணைத் தலைமை செயல் அதிகாரி, டத்தோ நூர் அஸியான் அப்துல் ஹமீத் கூறுகையில், 1403 வரி செலுத்தாத நபர்களில் உள்நாட்டில் இயங்கும் நிறுவனங்கள் அடங்கும் என்றார். இந்த ஆண்டு இறுதிக்குள் 90% அல்லது ரிம 293.6 மில்லியனை வசூல் செய்து வெட முடியும் என்றார் அவர்.

இதனிடையே, 'ஓப்ஸ் கூதிப்' 2017-இல் எந்த ஒரு பண வசூலும் செய்யப் படாது என்றும் இது வருமானவரி இலாகாவின் அதிகாரிகள் என மோசடிகள் செய்யக் கூடிய கும்பலை தடுக்க செய்யும் முயற்சி இது என உறுதி அளித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.