SELANGOR

எம்பிஎஸ், கெடிஇபிடபள்யுஎம்-மை தனது சேவைத் தரத்தை மேம்படுத்த வலியுறுத்தியது MPS

8 மே 2017, 4:40 AM
எம்பிஎஸ், கெடிஇபிடபள்யுஎம்-மை தனது சேவைத் தரத்தை மேம்படுத்த வலியுறுத்தியது  MPS
எம்பிஎஸ், கெடிஇபிடபள்யுஎம்-மை தனது சேவைத் தரத்தை மேம்படுத்த வலியுறுத்தியது  MPS

செலாயாங், மே 8:

கெடிஇபி கழிவு நிர்வாக  நிறுவனத்தை தனது சேவைத் தரத்தை மேம்படுத்தி செலாயாங் நகராண்மை கழக நிர்வாகத்தில் கீழ் உள்ள பகுதிகளில் மேலும் ஒத்திசைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

எம்பிஎஸ்-இன் துணைத் தலைவர், ஜுஹாரி அமாட் கூறுகையில், செலாயாங்கில் எல்லா இடங்களிலும் சரியான திட்டமிடல்  இருக்கிறது என்று கூறமுடியாது, சில கிராமங்களில் கழிவுபொருட்களை அகற்றும் லாரிகள் நுழைய முடியாது, இந்த  இடங்களில் சிறிய லாரிகள் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

"  நகராண்மை கழக  உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் எம்பிஎஸ் நிர்வாகிகள் போன்ற அனைவரின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு தான் இன்னும் பல பகுதிகளில் புகார்கள் உள்ளது என்று தெரிகிறது. ஆனாலும், 'கெடிஇபிடபள்யுஎம்" மூன்று மாதங்களுக்கு முன்பு 44 கழிவு பொருட்கள் அகற்றும் லாரிகளை பெற்ற பின் சேவையை மேம்படுத்தும் என்று  உறுதி அளித்தது," என்று ஆறு லாரிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் கூறுகையில், இந்த  ஆறு லாரிகளும் குப்பைகள் அகற்றும் புகார்களை நிவர்த்தி செய்ய  துணை ஒப்பந்தக்காரர்களிடம் எம்பிஎஸ்  ஒப்படைத்தது.

KDEBWM KOMPAKTOR (2)

 

 

 

 

 

 

"   இந்த குப்பைகளை அகற்றும் பணியில்  எழும் சிக்கல்களுக்கு ஒரு முடிவு  ஏற்படும். இதற்கிடையே மற்ற பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் புதிய லாரிகள் வரும் வரை அதே பழைய லாரிகளே பயன்படுத்த வேண்டும்," என்று கூறினார்.

கெடிஇபிடபள்யுஎம் தலைமை நிர்வாகி, ரம்லி தாஹிர் கூறுகையில், எம்பிஎஸ் உடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த மார்ச் 1 இருந்து கழிவு பொருட்கள் அகற்றும் சேவையை 44 பகுதிகளில் தனது நிர்வாகத்தில் கீழ் கொண்டு வந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.