RENCANA PILIHAN

ரசிகர்கள் சிலாங்கூர் தேர்வு குழு 2017 சிலாங்கூர் சுல்தான் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கின்றனர்

6 மே 2017, 9:08 AM
ரசிகர்கள் சிலாங்கூர் தேர்வு குழு 2017 சிலாங்கூர் சுல்தான் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கின்றனர்

சிங்கப்பூர், மே 6:

சிலாங்கூர் தேர்வு குழு சிங்கப்பூர் தேர்வு குழுவை வீழ்த்தி சுல்தான் சிலாங்கூர் கிண்ணத்தை சிங்கப்பூர் தேசிய அரங்கில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் மக்களின் எண்ணம் குறிப்பாக கால்பந்து ரசிகர்கள் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா தேர்ந்தெடுத்த பிகேஎன்எஸ் எஃப்சி குழு மாநிலத்தின் பிரதிநிதியாக களம் இறங்கி வெற்றி காணும் என்று பேசப்பட்டு வருகிறது.

சிலாங்கூர் ரேட் ஜயன்ஸ் ஆதரவாளர்கள் கிளப் தலைவர் கைருல் பஹாருடின் கூறுகையில், சிலாங்கூர் ரசிகர்கள் பிகேஎன்எஸ் குழுவிற்கு முழுமையான  ஆதரவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

" பிகேஎன்எஸ் எஃப்சி விளையாடினாலும், நாங்கள் தொடர்ந்து ரேட் ஜயன்ஸ் குழுவிற்கு முழுமையான  ஆதரவை வழங்கி வெற்றியடைய செய்வோம். இந்த தடவை சிலாங்கூர் சுல்தான் கிண்ணத்தை வென்று சிலாங்கூருக்கு எடுத்துச் செல்வோம்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

மேலும் கூறுகையில், வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என்றாலும் பிகேஎன்எஸ் எஃப்சி குழு எதிரணியில் அரங்கில் விளையாடினாலும் சிங்கப்பூர் தேர்வு அணியை ஈடுகொடுத்து வெற்றி வாகை சூடும் என்றார்.

"   நாங்கள்  எப்போதும் சிலாங்கூர் தேர்வு  அணியை  ஆதரிப்பவர்கள்," என்று கூறினார்.

ஹகிமுல்லா இஸ்மாயில் கூறுகையில்  ஒரு தலைச்சிறந்த விளையாட்டினை இரு குழுக்களும் வழங்கும்  என்று எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

ஏறக்குறைய 5000 சிலாங்கூர் ஆதரவாளர்கள் 120 பேருந்துகளில் சிங்கப்பூர் நகருக்கு சென்று சிலாங்கூர் தேர்வு குழுவை ஆதரித்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.