SAINS & INOVASI

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் இணைந்து பயன்பெற செயற்கைக்கோளை பாய்ச்சியது

6 மே 2017, 1:27 AM
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் இணைந்து பயன்பெற செயற்கைக்கோளை பாய்ச்சியது

நியூடில்லி, மே 6:

இந்தியா தொலைதொடர்பு சேவை செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. இன்று பாய்ச்சிய விண்கலம்  அண்டை நாடுகளுடன்  இணைந்து பயன்பெற வேண்டும் எனவும்  இவ்வட்டார நாடுகளில் அறப்பணிகள் செய்யும் முயற்சிக்கும் இது பேருதவியாக இருக்கும்.

இந்த முயற்சி சீன நாட்டின்  ஆதிக்கத்தை தெற்கு ஆசிய வட்டாரத்தில் வளர விடாமல் தடுத்து வைத்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. அதேவேளையில், பரம  எதிரியான பாகிஸ்தான் மேற்கண்ட நடவடிக்கையில் தான் பங்கு பெற மாட்டோம் என்று அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன்பு ஸ்ரீலங்கா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற அனைத்து நாடுகளுக்கான உறவை மேம்படுத்த வேண்டும் என உறுதி எடுத்துள்ளார். மேலும்  இந்த செயற்கைகோள் தெற்கு ஆசியாவிற்கு ஒரு வரப்பிரசாதம் என்று விவரித்தார்.

"   தெற்கு ஆசிய செயற்கைகோளை பாய்ச்சிய வெற்றி நமக்கு ஒரு சரித்திரம். இது நமது ஒத்துழைப்பை மேம்படுத்த நல்ல  ஒரு வாய்ப்பு." என்று ஸ்ரீ ஹரிகோதா வின்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் செயற்கைகோளை விண்ணில் பாய்ச்சிய பிறகு ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இதுவரை ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூத்தான், ஸ்ரீலங்கா மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகள் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.

இதனிடையே பாகிஸ்தான்  இந்த திட்டத்தில் பங்கேற்க முடியாது என்றும் தனது நாடு சுயேட்சையாக  ஒரு வின்வெளி திட்டத்தை ஆரம்பித்திருப்பதாக கூறியது.

தெற்கு ஆசிய செயற்கைகோள் தொலைக்காட்சி சேவையை நட்பு நாடுகளுக்கு மேம்படுத்தவும் தொலைதொடர்பு தொழில் நுட்பத்தை பணப் பட்டுவாடா மற்றும் அரசாங்க நிறுவனங்களின் டிஜிட்டல் சேவையை வழங்கவும் இது  உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.