NATIONAL

பாஸ் கெஅடிலான் உறவினை தவறாக சித்தரிக்காதீர்

29 ஏப்ரல் 2017, 11:30 AM
பாஸ் கெஅடிலான் உறவினை தவறாக சித்தரிக்காதீர்

செபராங் ஜெயா - பாஸ் மற்றும் கெஅடிலான் கட்சியிக்கு இடையிலான உறவினை எந்த தரப்பினரும் தவறான நிலையில் சித்தரிக்க வேண்டாம் என கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.மேலும்,மாநில ஆட்சிக்குழுவின் பாஸ் கட்சியின் பங்களிப்பு குறித்தும் யாரும் அர்த்தமற்ற நிலையில் குறிப்பிட வேண்டாம் என்றார்.

மேலும்,பாஸ் கட்சி கெஅடிலானுடனான உறவு மற்றும் அஃது மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருப்பது போன்றவற்றில் அக்கட்சி விவேகமாகவும் அறிவார்ந்த நிலையிலும் முடிவெடுக்கும் என்றும் தாம் நம்புவதாக முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

இதை நாம் பெரும் பிரச்னையாக கருதாமல் அதனை விவேகமாய் கையாளும் திறன் மேமடுத்தப்பட வேண்டும் என நினைவுறுத்திய அவர் நாம் உணர்ச்சிப்பூர்வமாய் சிந்திக்காமல் அறிவார்ந்த நிலையில் விவேகமாய் அணுக வேண்டும் என்றார்.பாஸ் மற்றும் கெஅடிலான் ஒரே கூட்டணியில் சிலாங்கூர் மாநிலத்தில் இடம் பெற்றிருந்தாலும் கட்சி ரீதியில் அவற்றின் கொள்கையும் கொட்பாடு வேறு என்பதை நாம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.

தற்போது பாஸ் அதன் மாநாட்டை கெடாவில் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அம்மாநாட்டுக்கு தனிப்பட்ட முறையில் தனக்கு அழைப்பு வந்ததாகவும் கூறிய அவர் தைவானிலிருந்து தாமதமாக நாடு திரும்பியதால் அம்மாநாட்டுக்கு கட்சியின் உதவித் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஷாரூடின் படாரூடின் கலந்துக் கொண்டதாகவும் பினாங்கு மாநில கெஅடிலான் மாநாட்டில் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.