PBT

டெங்கு நோய் எதிர்ப்பு தீவிரம்

28 ஏப்ரல் 2017, 8:15 AM
டெங்கு நோய் எதிர்ப்பு தீவிரம்
டெங்கு நோய் எதிர்ப்பு தீவிரம்

அம்பாங், 28 ஏப்ரல்:

அம்பாங் ஜெயா நகராண்மை கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் கடந்த 25 ஏப்ரல் வரை 1431 டெங்கு காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எம்பிஎஜே-வின் தலைவர், அப்துல் ஹமீத் ஹுசேன் கூறுகையில், எட்டு  "ஹொட்ஸ் ஸ்போர்ட் " பகுதிகளாக  ஸ்ரீ நீலாம் அடுக்குமாடி வீடுகள், தாமான் மெலாவாத்தி, பண்டான் பெர்டானா, பண்டான் மேவா, தாமான் கோசாஸ், தாமான் புக்கிட்  இண்டா, கம்போங் செராஸ் பாரு மற்றும் தாமான் ஸ்ரீ அங்சானா ஹிலிர் ஆகியவை  அடையாளம் காணப்பட்டது.

எம்பிஎஜே, டெங்கு காய்ச்சல் சம்பவங்களை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து அதைத் தடுக்கும்   நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

 

 

ydp-mpaj-abd-hamid-hussain

 

 

 

 

 

 

" எம்பிஎஜே மேலும் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவி வரும்  பகுதிகளில் டெங்கு லார்வாக்களை அழிக்கும் உக்தியை பயன்படுத்தி வருவதாகவும், இதுமட்டுமின்றி  இந்த பகுதியில்  அடிக்கடி பரிசோதனை செய்தும் வருகிறது," என்றார்

"எம்பிஎஜே தொடர்ந்து "ஏடிஸ் இல்லாத பின்புற சாலைகள்" என்ற திட்டத்தை ஆறு  இடத்தில்  அமல்படுத்தி வருகிறது.  இதில் லார்வாக்களை அழிப்பது, சுகாதார விளக்கங்கள், அமலாக்க நடவடிக்கைகளும்  அடங்கும்," என்றார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.