PBT

99 ஸ்பீட்மார்ட் பிளாஸ்டிக் பை விற்பனையில் வசூலித்த ரிம 500,000-வை கிள்ளான் நகராண்மை கழகத்திற்கு வழங்கியுள்ளது

26 ஏப்ரல் 2017, 3:51 AM
99 ஸ்பீட்மார்ட் பிளாஸ்டிக் பை விற்பனையில் வசூலித்த  ரிம 500,000-வை கிள்ளான் நகராண்மை கழகத்திற்கு வழங்கியுள்ளது
99 ஸ்பீட்மார்ட் பிளாஸ்டிக் பை விற்பனையில் வசூலித்த  ரிம 500,000-வை கிள்ளான் நகராண்மை கழகத்திற்கு வழங்கியுள்ளது

கிள்ளான், 26 ஏப்ரல்:

99 ஸ்பீட்மார்ட் நிறுவனம் ரிம 500,000-தை கிள்ளான் நகராண்மை கழகத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது சிஸ்ஆர் எனப்படும் சமுதாய அக்கறை கொண்ட செயல்பாடுகளின் அடிப்படையில் பிளாஸ்டிக் பை (20 சென்) விற்பனையில் வசூலித்த தொகையை வழங்கியுள்ளது.

கிள்ளான் நகராண்மை கழக துணைத் தலைவர் அடி பைஃசால் அமாட் தர்மிஸி கூறுகையில், இத்தொகை கிள்ளான் வட்டாரத்தில் 99 ஸ்பீட்மார்ட் நிறுவனத்தின்  96 கிளைகளில் இருந்து வசூல் செய்ததாகும் என்று தெரிவித்தார்.

" 20 சென் வசூலித்த தொகையை பல்வேறு சமுதாய உணர்வுள்ள நிகழ்ச்சிகளை நடத்த ஆயுத்தம் செய்வதாக இருக்கிறோம்,"  என்று கூறினார்.

"எங்களின் திட்ட அறிக்கையை 99 ஸ்பீட்மார்ட் நிறுவனம்  ஏற்றுக் கொண்டதை பெருமை கொள்கிறேன்," என்றார்

 

இந்த முடிவானது,  கிள்ளான் நகராண்மை கழகம் 99 ஸ்பீட்மார்ட்  20 சென் பிளாஸ்டிக் பை விற்பனையில் வசூலித்த தொகையை பெறும் முதல் ஊராட்சி மன்றமாக திகழும்.

 

mpk-660x4731

 

 

 

 

 

 

இந்த பரிந்துரை பிப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்டது என்றும், இந்நிதி மூன்று பகுதிகளாக முறையே ஆற்றின் சுத்தம், நகர  அழகுப்படுத்துதல் மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஷா ஆலம் மாநகராட்சி மன்றமும் இந்த திட்டத்தில் இணைய விருக்கிறது. மேலும் கூறுகையில், கிள்ளான் நகராண்மை கழகம், இது வரை  எந்த ஒரு சட்டத்தையும் கொண்டு வியாபாரிகளை கட்டாயப் படுத்தி பிளாஸ்டிக் பை விற்பனை செய்யவில்லை என்று தெரிவித்தார்.

 

=EZY=

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.