ECONOMY

தைனான் சிலாங்கூரில் வியாபார முதலீடு செய்வதற்கு மிக உற்சாகமாக இருக்கிறது

26 ஏப்ரல் 2017, 1:24 AM
தைனான் சிலாங்கூரில் வியாபார முதலீடு செய்வதற்கு மிக உற்சாகமாக இருக்கிறது

தைனான், தைவான் 26 ஏப்ரல்:

தைனான் நகரம் சிலாங்கூரில் வாணிபத்தை பெருக்க ஆர்வமாக உள்ளது இரு தரப்பினரும்  ஆதாயம் கிடைக்கும்.

இந்த நிலையை தைனான் மேயர் டாக்டர் வில்லியம் லாய் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் பிரதிநிதிகளுக்கு வழங்கிய  இரவு விருந்து அளித்து கவுரவிக்கும் பொழுது தெரிவித்தார்.

"சிலாங்கூர் மாநிலத்தோடு வாணிப  உறவு வைத்துக் கொள்வது அவசியம் என்றும் இதை செய்வதற்கு மிக ஆர்வமாக இருக்கிறேன்.  இதனால்  இரண்டு தரப்பினரும் நன்மை அடைவார்கள், "என்று உறுதியாக கூறினார்.

இதை மேற்கோள்காட்டி, முகமட் அஸ்மின் அலி  இஸ்லாமிய முறையிலான சூழ்நிலையை உருவாக்கி இருக்கும் தைனான் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்ததுடன் ஹாலால் சான்றிதழ் பெற்ற உணவு மற்றும் தங்கும் விடுதி போன்ற துறைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அவரோடு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களான தெங் சாங் கிம், அமிருடின் ஷாரி, டத்தோ டாக்டர் அமாட் யூனுஸ் ஹய்ரி, மாநில துணை செயலாளர் டத்தோ நோர்  அஸ்மி டிரோன், இன்வெஸ்ட் சிலாங்கூரின் தலைமை செயல் அதிகாரி டத்தோ ஹாசான், சிட்தேக் தலைமை செயல் அதிகாரி வோங் கை பெங், சென்றல் ஸ்பெக்டரமின் தலைமை செயல் அதிகாரி மாமுட் அபாஸ், ஹாலால் மற்றும்  இ-வணிகத்தை சேர்ந்த தொழில் முனைவர்களும் கலந்து கொண்டனர்.

=EZY=

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.