NATIONAL

TV3, உனக்கு மன்னிப்பே கிடையாது

25 ஏப்ரல் 2017, 3:30 AM
TV3, உனக்கு மன்னிப்பே கிடையாது

ஷா ஆலம், 25 ஏப்ரல்:

நாட்டின் விரைவு ஓட்டக்காரர் ஆன, வாட்ஸன் நயம்பேக் தனது தகப்பனாரை கேவலமாக பேசப்பட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த தனியார் டிவி நிலையத்தை மன்னிக்க போவதில்லை என்றார்.

தகவல்  ஊடகங்களுடன் பேசுகையில், அவர்  இன்னும் மன்னிக்க தயாராக இல்லை என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பேச்சாளரை சந்தித்த பிறகும் எண்ணம்  இன்னும் தோன்றவில்லை என்றார்.

" நான் அவர்களுடைய மன்னிப்பை  ஏற்க மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும்  ஏனெனில்  இவர்கள்  எனது தந்தையை மிகவும் கேவலமாக மிருகத்துடன் ஒப்பீடு செய்திருப்பது வேதனையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது." என்றார்.

நேற்று, சில TV3 மற்றும் "தாக் சென்றல்" விளையாட்டு நிகழ்ச்சியை தயாரித்த நிறுவனமான பிரைம்வோக் ஸ்டூடியோஸ் அதிகாரிகள் வாட்ஸனை மிரி, சரவாக்கில் சந்தித்தனர்.

 

கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பபட்ட TV3 நிகழ்ச்சியில் வாட்ஸனை ஆட்டின் சத்தத்தோடு ஒப்பீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக, நாட்டின் 100 மீட்டர் சாதனை படைத்த வாட்ஸன் மிரியின் காவல்துறையில் புகார் செய்தார். காலை 9.20 க்கு மனைவியுடன் மற்றும்  20 அரசு சார்பற்ற இயக்கங்களுடன் வந்து புகார் கொடுத்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.