SELANGOR

பேச்சு வார்த்தை இல்லை, ஆனால் மத்திய அரசாங்கம் கடற்கொள்ளைக்காரன் போல் எம்பிபிஜேவை நடத்துகிறது

22 ஏப்ரல் 2017, 11:29 PM
பேச்சு வார்த்தை  இல்லை,  ஆனால் மத்திய அரசாங்கம் கடற்கொள்ளைக்காரன் போல்  எம்பிபிஜேவை நடத்துகிறது

சுபாங், 23 ஏப்ரல்:

மத்திய அரசாங்கம் வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சின் வழி கடற்கொள்ளைக்காரனை போல் நடந்து கொள்வது தொழில்முறை லான வழக்கத்தை பின்பற்றாமல் ஒரு அரசாங்கத்தின் வழிமுறையை பின்பற்ற வேண்டும். டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், வீடமைப்பு  மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சு தாமான் புத்ரா மக்கள் வீடமைப்பு திட்டத்தில் நிர்வாக அலுவலகத்தை அமைத்து பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தை புறக்கணித்து இச்செயலில் ஈடுபட்டதின் மூலம் அம்பலம் ஆகிவிட்டது என்றார்.

" பேச்சு வார்த்தை நடைபெறவில்லை  ஏனெனில் அவர்கள் மாநில  அரசாங்கத்திடம் எந்த ஒரு சந்திப்பிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை ஆனால் மாநகராட்சியின்  அனுமதி இல்லாமல் கொள்ளையனை போல்  அலுவலகத்தை திறந்து அத்துமீறி நுழைந்துள்ளனர்."

" இது மத்திய மாநில அரசாங்கங்கள் தொடர்பு கொள்ளும் முறையல்ல. ஒரு அமைச்சர் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவேண்டும். நாம்  அமர்ந்து விவாதிக்கலாம்" என்றார்.

மேலும் கூறுகையில், அவரும் வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத்தும் இப்பிரச்சினையை பேசி தீர்க்க தயாராக இருந்து வந்ததாக கூறினார்.

மேலும் கூறுகையில், கையகப்படுத்தும் முயற்சிகள் சட்டத்தின் கீழ் நடைபெற வேண்டும் எனவும் ஒப்படைப்பு  ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட  எல்லோரும்  ஒத்துக் கொள்ளும் முறையில் இருக்கவேண்டும்.

 

@கெஜிஎஸ்


அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.