MEDIA STATEMENT

அம்னோ பிஎன் அரசாங்கம் கெமாஸ்ஸை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துகிறது

21 ஏப்ரல் 2017, 7:51 AM
அம்னோ பிஎன் அரசாங்கம் கெமாஸ்ஸை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துகிறது


புறநகர் மேம்பாடு மற்றும் பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யக்கோப் பெராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் வெளிப்படையாக கெமாஸ் அதிகாரிகளை அம்னோ தேசிய முன்னணியின் அரசியல் இயந்திரமாக  எதிர்க்கட்சிகளை எதிர்கொண்டு வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து  அவர், அரசியல் பிரசார நிகழ்ச்சிகளை தொகுதி அம்னோ தலைவர்களுடன் இணைந்து கெமாஸ்-இன் பண ஒதுக்கீடுகளைக் கொண்டு  நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதன் மூலம்  அம்னோ பிஎன் மிகவும்  இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.  ஒவ்வொரு பொதுத் தேர்தல் வரும் பொழுதும் அம்னோ பிஎன் அரசாங்கத்தின் தீய தந்திரங்கள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கெமாஸ்  அரசாங்கத்தின் கீழ் இயங்கும்  ஒரு இலாகா ஆகும். இது புறநகர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் புறநகர் மக்களின் வாழ்க்கை தரத்தை  மேம்படுத்தவும்  அவர்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்  உயர்த்தவும் கெமாஸ்-இன்  நோக்கமாகஇருக்க வேண்டும். கெமாஸ் அதிகாரிகளின் சம்பளம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வருகிறது எனவும்  அம்னோ தேசிய முன்னணியின் பணபலம்  அல்ல என்றும் குறிப்பிட்டார்.

 

அமாட் நிஸாம்

பகாங் மாநில கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர்

 

@கெஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.