RENCANA PILIHAN

நெல் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உதவியில் பாரபட்சம் இல்லை

19 ஏப்ரல் 2017, 7:38 AM
நெல் விவசாயிகளுக்கு  அளிக்கப்பட்ட  உதவியில் பாரபட்சம்  இல்லை
நெல் விவசாயிகளுக்கு  அளிக்கப்பட்ட  உதவியில் பாரபட்சம்  இல்லை

ஷா ஆலம், 19 ஏப்ரல்:

பேக்டீரியாவினால் நெற்பயிருக்கு  ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும்  உதவி உதவியில் பாரபட்சம்  எதுவும் இல்லை. மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜய்டி அப்துல் தாலிப் கூறுகையில் சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர்   டத்தோ ஸ்ரீ ஜமால் கூறிவந்த பாரபட்சம்  என்ற கேள்விக்கே இடமில்லை. இது வெறும் பொய்யான கூற்று ஆகும்.

" எப்போதும் போல ஜமாலின் குற்றச்சாட்டு அடிப்படையே இல்லாதது. உதவிகள்  அனைத்தும் மாநில விவசாய  இலாகாவின் வழி நடத்தப் பட்ட  ஆய்வின் படி வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது."

இதற்கு முன்பாக, ஜமால் கொடுக்கப் பட்ட உதவிகளில் அரசியல் ரீதியாகவும் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போய் சேரவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.

 

ஏற்கனவே மசூதிகள் அரசாங்கம் ரிம8.5 மில்லியன்  அளவிலான உதவி நிதியை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. விவசாயம் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அதிகாரம் என்றாலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மசூதிகள் அரசாங்கம்  மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவி  அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

Zaidy Abdul Talib (1)

-AA-

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.