ஷா ஆலம் 19 ஏப்ரல்
கடந்த 2 ஆண்டுக்கு முன் அறிமுகம் செய்த பொருட்கள் சேவை வரி (ஜிஎஸ்டி) மக்களின் சுமைகளையும் அதிகரிப்பு செய்தது, மேலும் இதன் திட்டம் மற்றும் அமலாக்கம் பல நிறுவனங்களுக்கு சவாலாகவே இருக்கிறது.
25,000 நிறுவனங்கள் தங்கள் கணக்கறிக்கையை சுங்கத்துறையிடம் சமர்ப்பிக்காமல் இருப்பது இதற்கு ஒரு சான்று. மொத்தம் 437,000 நிறுவனங்கள் சுங்கத்துறையிடம் பதிவு பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
20% நிறுவனங்களின் வரி கணக்குகள் சந்தேகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல நிறுவனங்கள் இன்னும் குழப்பமான சூழ்நிலை இருப்பதாக தெரிகிறது.
நெகிரி செம்பிலான் மாநில சுங்கத்துறை இயக்குனர் டத்தோ அப்துல்லாவின் கூற்றுப்படி ஆகஸ்டு 2016 வரையில், 21 நிறுவனங்கள் மீது விசாரணை செய்யப்படுவதாகவும், மேலும் 3 நிறுவனங்கள் மீது நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.
மேலும் கெஅடிலான், 600 சுங்கத்துறை அதிகாரிகளை பயன்படுத்தி நிறுவனங்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் வீண் விரயம் என்றும் கருதுகிறது. முறையற்ற வரி வசூல் மேம்படுத்த வேண்டும், ஏனெனில் தற்போதைய முறை நேரத்தையும் சுங்கத்துறை அதிகாரிகளின் செயல்களையும் வீணடிக்கிறது.

*


