SELANGOR

சிறந்த சேவையினை மேம்படுத்த புதிய வாகனங்கள் அறிமுகம்

14 ஏப்ரல் 2017, 8:20 AM
சிறந்த சேவையினை மேம்படுத்த புதிய வாகனங்கள் அறிமுகம்
சிறந்த சேவையினை மேம்படுத்த புதிய வாகனங்கள் அறிமுகம்
சிறந்த சேவையினை மேம்படுத்த புதிய வாகனங்கள் அறிமுகம்

கோம்பாக் - தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் நீர் செயல்பாடும் மற்றும் பராமரிப்பு மிகவும் சீராகவும் அதேவேளையில் நன் நிலையிலும் இருப்பதை தொடர்ந்து மாநில அரசாங்கம் உறுதி செய்யும் என கூறிய மாநில நீர் வாரிய துறையின் தலைமை இயக்குனர் சுஹாய்மி கமாருல்ஷாமான் சிலாங்கூர் நீர் வாரியம்  பல்வேறு புதிய மற்றும் நவீன வாகனங்கள்,தரம் மேம்பாட்டு கருவிகள் ஆகியவை அதற்கு பெரும் சான்றாக இருப்பதாகவும் கூறினார்.

தரமான சேவையையும் விரைவான மற்றும் விவேகமான சேவையினை வழங்குவதற்காக சிலாங்கூர் நீர் வாரியம் பழைய வாகனங்களை புதுப்பித்து சீரமைத்திருப்பதோடு மட்டுமின்றி புதிய நவீனத்துவ வாகனங்களையும் அஃது கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த வடிமைக்கப்பட்ட மற்றும் சீரமைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மாநிலத்தில் ஆங்காங்கே நீர் குழாய் பழுது அடைந்தால் அதனை உடனடியாக சீரமைக்கவும் விரைந்து கண்காணிக்கவும் வகை செய்யப்படுவதோடு மாநில நீர் வாரியத்தின் சேவையை மேம்படுத்துவதற்கும் அஃது வழிகோலும் என்றார்.

MB AIR SEL 5

 

 

 

 

 

சிலாங்கூர் நீர் வாரியம் அதன் சேவையை மேம்படுத்துவதற்கு மக்களுக்கு நிறைவான சேவையை வழங்குவதற்கும் மோட்டார் சைகிள்கள் மட்டுமின்றி கார் மற்றும் லாரிகளையும் பயன்படுத்துகிறது.மோட்டார் சைகிள் மட்டுமின்றி கார் மாற்றும் லாரியும் சிறந்த சேவையினை முன்னிறுத்தி பல்வேறு சீரமைப்பு மற்றும் வசதிகளை அதில் புகுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் நீர் வாரியத்தின்  வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் அறிமுக விழாவினை மாநில மந்திரி பெசார் கோம்பாக் நீர் வாரிய செயலகத்தில் தொடக்கி வைத்த  போது அதன் தலைமை இயக்குனர் இவ்வாறு கூறினார்.

 

MB AIR SEL 6    இம்மாதிரியான நவீனத்துவம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு வடிமைக்கப்பட்ட வாகனங்களால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சென்றும் தரமான சேவையினை வழங்க முடியும் என்றார்.குறிப்பாக நவீன கார்கள் மூலம் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் குழாய் சீரமைப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலகுவாய் இருக்கும் என்றார்.

அதேவேளையில்,செயல்பாட்டில் இருக்கும் 75 லாரிகளிலும் ஜிபிஎஸ் செயல்பாடு கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் அதன் நடவடிக்கைகளையும் வழி தடங்களையும் விவேகமாய் கண்காணிக்க முடியும் என்றும் கூறினார்.

சிலாங்கூர் மாநில நீர் வாரியம் மக்களுக்கு தொடர்ந்து ஆக்கப்பூர்வ செயல்பாட்டையும் நிறைவான சேவையையும் வழங்குவதற்கு விவேகமாய் செயல்படுவதாகவும் அதற்கு மாநில அரசாங்கமும் பெரும் பங்களிப்பினை வழங்குவதாகவும் அவர் பெருமிதமாய் கூறினார்.

 

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.