SELANGOR

எம்பிஎஸ்ஜெவின் கலை,பண்பாட்டு நிகழ்விற்கு அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்

13 ஏப்ரல் 2017, 9:41 AM
எம்பிஎஸ்ஜெவின் கலை,பண்பாட்டு நிகழ்விற்கு அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்
எம்பிஎஸ்ஜெவின் கலை,பண்பாட்டு நிகழ்விற்கு அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்

சுபாங் ஜெயா - சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்விற்கு பொது மக்கள் திரளாக கலந்துக் கொள்ள வேண்டும் என அதன் பெருநிறுவன தொடர்புத்துறையின் துணை இயக்குநர் ஹஸ்பாரிஸல் அப்துல் ரஷிட் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்வு வரும் 22 மற்றும் 23 ஏப்ரலில் இங்குள்ள "The Summit USJ" பேரங்காடியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வின் மூலம் நமது கலை மற்றும் பண்பாட்டினை இளம் தலைமுறைக்கு குறிப்பாக மாணவர்களிடையே கொண்டு செல்வதற்கு பெரும் வாய்ப்பாக அமைவதோடு சுற்றுப்பயணிகளை கவரவும் இது வழிகோலும் என்றார்.

அதுமட்டுமின்றி,வெளிநாட்டு சுற்றுப்பயணிகளையும் இதன் மூலம் கவர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

DSC_4284      மேலும்,பல்வேறு வயதினர் மற்றும் மொழி,இனம் சார்ந்தவர்களோடு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் கலந்துக் கொள்ளும் போது அஃது மாபெரும் புதியதொரு அனுபவத்தையும் சூழலையும் உருவாக்குவதோடு அதன் மூலம் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.

மிகவும் நன் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வில் அரசு இலாகாக்களோடு தனியார் நிறுவனங்களும் தங்களின் முகப்பிடங்களையும் செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.       இதற்கிடையில்,மலேசிய சுற்றுலா துறை,சிலாங்கூர் மாநில சுற்றுலா வாரியம்,சிலாங்கூர் மாநில மலாய் பண்பாடு வாரியம்,தாபூங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தாவாஸ்) மற்றும் யுஐடிஎம் பல்கலைக்கழக கலாச்சார பண்பாடு இலாகா ஆகியவையும் பங்கெடுக்கும் என்றார்.

அதுமட்டுமின்றி,பூர்வகுடியினரின் பாரம்பரிய நிகழ்வுகளும் பல்வேறு பாரம்பரிய பண்பாடு விளையாட்டுக்களும் இதில் இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.சிறப்பான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் வேளையில் பொது மக்கள் திரளாக வருகை புரிந்து இந்நிகழ்வு அதன் இலக்கை அடைய பெரும் பங்காற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.