NATIONAL

நாடாளுமன்றத்தில் தஜீடின் கூறிய வார்த்தையில் வெளியில் சொல்ல அவர் மகனுக்கு துணிவுண்டா?

13 ஏப்ரல் 2017, 8:03 AM
நாடாளுமன்றத்தில் தஜீடின் கூறிய வார்த்தையில் வெளியில் சொல்ல அவர் மகனுக்கு துணிவுண்டா?
நாடாளுமன்றத்தில் தஜீடின் கூறிய வார்த்தையில் வெளியில் சொல்ல அவர் மகனுக்கு துணிவுண்டா?

ஷா ஆலாம் - நாடாளுமன்றத்தில் பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தஜூடின் தெரெசாக் கோக்கிற்கு எதிராய் வெளியிட்ட ஆபாசமான வார்த்தையினை அவரது மகனான டாக்டர் பைசால் நாடாளுமன்றத்தில் வெளியில் சொல்ல முடியுமா என ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் சவால் விடுத்தார்.

தனது தந்தையின் வார்த்தையில் எவ்வித சட்டத்திற்கு புறம்பான வார்த்தையோ மற்றவர்களின் உணர்வுகளையும் அவர்களை இழிவுப்படுத்தும் வகையிலான தன்மைக் கொண்ட வார்த்தைகளும் உள்ளடங்கவில்லை என கூறும் டாக்டர் பைசால் அதே வார்த்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் சொல்வதற்கு துணிவுண்டா எனவும் சவால் விடுத்தார்.

நாடாளுமன்றத்தின் பின்னணியில் ஒலிந்துக் கொண்டு வெளியிட்ட வார்த்தையை துணிவிருந்தா நாடாளுமன்றத்திற்கு வெளியிட அவர்கள் முன்வர வேண்டும் என்றார்.தஜூடின் வெளியிட்ட வார்த்தை இழிவானது என்பதை வலியுறுத்திய காலிட் சமாட் நாடாளுமன்றத்தில் தஜூடின் வெளியிட்ட அந்த வார்த்தையால் பெரும் அமளி ஏற்பட்டத்தையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தனது தந்தைக்கு எதிராய் காலிட் சமாட் கடுமையான சொற்களை பயன்படுத்தியது தொடர்பில் போலீஸ் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பைசால் போலீஸ் எதிராய் செய்தி வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி கடந்தாண்டில் தாஜுடின் நாடாளுமன்றத்தில் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி நாடாளுமன்றத்தில் "கோக்" இருக்கும் ஒரே பெண்மணி தெரெசா கோக் மட்டுமே என குறிப்பிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Khalid Diserang       அதனை தொடர்ந்து தனது வார்த்தையினை மீட்டுக் கொள்ள தவறிய  தாஜூடினை நோக்கி  "சியால்" என காலிட் சமாட் சாடினார்.இந்த  விவகாரத்தை தொடர்ந்து டாக்டர் பைசால் உட்பட தாஜுடின் ஆதரவாளர்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 23 நவம்பர் 2016இல் காலிட் சமாட்டை தாக்க முயன்றனர்.ஆனால்,அவர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.