RENCANA PILIHAN

சிலாங்கூர் வழிபாட்டுத்தல விதிமுறை அகற்றம்

12 ஏப்ரல் 2017, 5:06 AM
சிலாங்கூர் வழிபாட்டுத்தல விதிமுறை அகற்றம்
சிலாங்கூர் வழிபாட்டுத்தல விதிமுறை அகற்றம்

ஷா ஆலாம் - சர்ச்சைக்குரிய சிலாங்கூர் மாநில வழிப்பாட்டுத்தல விதிமுறை நிர்ணயம் அகற்றப்பட்டிருப்பதாகவும் மீண்டும் அதனை முறையாக வரையறுக்கும்படி சம்மதப்பட்ட துறை உத்தரவு விடப்பட்டிருப்பதாகவும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கீம் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தின் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறிய அவர் அந்த சர்ச்சைகுரிய விவகாரத்தை இன்று ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

 

சர்ச்சைகுரிய அந்த விதிமுறைகள் அகற்றப்பட்டதோடு அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான விதிமுறைகள் ஆராயப்படவும் விவேகமான நடவடிக்கையினை வரையறுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.அஃது இஸ்லாமிற்கும் பொருந்தும் என்றும் கூறினார்.

இதற்கிடையில்,சர்ச்சைகுரிய விதிமுறைக்காக தாம் பதவி விலக்வும் தயார் என கூறிய அவர் அது குறித்து எவ்வித விவாதமும் நடைபெறவில்லை என்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அனைத்து இனம்,மதங்களின் உணர்வுகளையும் சமய நம்பிக்கைகளையும் புரிந்துணர்வோடு மதிப்பதாகவும் கூறினார்.

 

TENGசிலாங்கூர் அரசாங்கம் அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும் அதன் மாண்பையும் மதிக்கும் அதேவேளையில் இம்மாநிலத்தில் மதநல்லிணக்கமும் ஒற்றுமையும் மேலோங்க வேண்டும் என்பதில் தனித்துவ கவனமும் அக்கறையும் கொண்டுள்ளது என்றார்.இஸ்லாம் மட்டுமின்றி அனைத்து மதங்களும் சிலாங்கூர் மாநிலத்தில் அதற்கான உரிய அங்கீகாரத்தையும் சமய சுதந்திரத்தை பெற்றிருப்பதாகவும் டத்தோ தேங் சாங் கீம் கூறினார்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.