SELANGOR

பாங்கி சட்டமன்ற தொகுதியில் சித்திரைப்புத்தாண்டு பரிசுகள்

10 ஏப்ரல் 2017, 5:04 AM
பாங்கி சட்டமன்ற தொகுதியில் சித்திரைப்புத்தாண்டு பரிசுகள்

உலு லாங்காட் -சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சுமார் ஆயிரம் இந்தியர்களுக்கு பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது.இஃது பாங்கி சட்டமன்ற தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஷாப்பி ங்கா இது குறித்து கூறுகையில் அனைத்து சமூகத்துடனான உறவும் புரிந்துணர்வும் தொடர்ந்து மேலோங்கவும் நம்மிடையே ஒற்றுமை வலுப்பெறவும் இதுபோன்ற இனிய நாட்கள் பெரிதும் உதவுவதாக கூறிய அவர் இந்நிகழ்வின் பொது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து கூறியதோடு ஹம்பர் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டதாக மேலும் கூறினார்.

இந்த நிகழ்வின் வாயிலாக மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்ததாகவும் கூறிய அவர் இந்நிகழ்வில் புக்கிட் மேவா,தாமான் ஸ்ரீ இந்தான்,தாமான் காஜாங் சென்டரல்,தாமான் புக்கிட் காஜாங் பாரூ உட்பட பாங்கி தொகுதிக்கு உட்பட்ட இந்தியர்கள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுடனான இச்சந்திப்பின் போது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டங்களும் அதன் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளும் மக்களிடையே சென்றடைந்திருப்பதை வெகுவாக காண முடிந்ததாக கூறிய சட்டமன்ற உறுப்பினர் மாநில அரசின் செயல்பாடுகள் மக்களிடையே நன் வரவேற்ப்பினை பெற்றிருப்பதையும் காண முடிந்ததாகவும் கூறினார்.

சித்திரைப்புத்தாண்டை கொண்டாடும் இந்தியர்களுக்கும் வாழ்த்து கூறிய வேளையில் இந்நிகழ்வினை பாங்கி தொகுதி சட்டமன்றமும் பாஸ் செர்டாங் தொகுதியும் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

DUN BANGI KAUM INDIA (2)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.